ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை - கனமழைக்கு இதுவரை 28 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை - கனமழைக்கு இதுவரை 28 பேர் பலி
x
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. முழங்கால் வரை தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், நேற்றிரவு ஐதராபாத் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. மழையின்போது சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளும் நீரில் அரித்துச் செல்லப்பட்டன. ஐதராபாத் நகரில்18 பேரும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 10 பேரும் இதுவரை கனமழைக்கு உயிரிழந்துள்ளனர். மழைநீரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட முதலை - அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், முசி ஆற்றில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் மேடான பகுதிகளில் ஏறி நின்று முதலையை படம்பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்பு படையினர் முதலையை பத்திரமாக மீட்டனர்.

கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை

ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக கர்நாடகாவின் வடமாவட்டங்களிலும் தொடர்மழை பெய்தது. 
இதனால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.குறிப்பாக ஆந்திரா- கர்நாடக எல்லை மாவட்டங்களான கல்புர்கி, யாதகிரி, ராய்ச்சூர் போன்ற கர்நாடகாவின் வடமாவட்டங்களில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராமங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளது. மேலும் வட கர்நாடக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்