கொரோனாவால் பாதிக்கப்படாத ஆப்பிள் விற்பனை - உற்பத்தி குறைந்த போதிலும் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சி

கொரோனா பரவலால், சந்தைகள் மூடப்பட்ட போதிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படவில்ல என கூறுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படாத ஆப்பிள் விற்பனை - உற்பத்தி குறைந்த போதிலும் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சி
x
கொரோனா பரவலால், சந்தைகள் மூடப்பட்ட போதிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படவில்ல என கூறுகின்றனர். ஹிமாச்சல பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு ஐந்தரை லட்சம் டன் அளவிற்கு ஆப்பிள்கள் இங்கு உற்பத்தியாகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவலால் ஆப்பிள் உற்பத்தி குறைந்த போதிலும், தரமான ஆப்பிள்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். 20 கிலோ அளவிலான ஆப்பிள் பெட்டிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைப்பதால், பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்