வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: "நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க.கோரிக்கை" -அ.தி.மு.க. உறுப்பினர் கருத்தில் உடன்பாடு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் தொடர்பான, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் கருத்தில் உடன்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க.கோரிக்கை -அ.தி.மு.க. உறுப்பினர் கருத்தில் உடன்பாடு
x
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் தொடர்பான, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் கருத்தில் உடன்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், துணை நிலை ஆளுநர், உள்துறை அமைச்சருக்கு  கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும்  28 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் போராட்டம் நடத்தப்படும் என் முதலமைச்சர் அறிவித்திருப்பது மக்களின் மனதை தடுமாற்றம் அடைய செய்யக்கூடிய செயல்  என தெரிவித்துள்ளார்.  கொரோனா நோய் பரவுவதை தடுப்பதில் கவனம் செலுத்துவது முதல்வரின் கடமை என்றும்,  மக்களின் ஆரோக்கியத்திற்காக இந்த விவகாரத்தில், துணை நிலை ஆளுநர்  தலையிட்டு பேரழிவு மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்று நோய்கள் சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் நாராயணசாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்