கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு - பெங்களூரில் சிக்கினார், தங்க ராணி ஸ்வப்னா
பதிவு : ஜூலை 12, 2020, 08:08 AM
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 3 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். தங்க ராணி சிக்கியது எப்படி என பார்க்கலாம்...
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் பாசில் ஃபரீத் ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

ஷரீத் கைதான நிலையில் ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவானார்கள். மேலும் முன் ஜாமீன் கேட்டு சொப்னா சுரேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருவதால் அந்த நீதிமன்றத்தில் ஜாமீன் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தியிருந்தது. கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் மற்றொருவரையும் பெங்களூரில் கோரமங்களத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுதிந்திரா ராய் என்பவருக்கு சொந்தமான வீட்டில்  வைத்து நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வீட்டில் ஸ்வப்னாவின் கணவர் மற்றும் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதற்கிடையே  திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கர்  குடியிருந்த அப்பார்ட்மண்டில் சுங்கத்துறையினர் பரிசோதனை நடத்தினர். இதேபோல் திருவனந்தபுரத்தில் உள்ள சந்தீப் நாயரின் அருவிகாரா வாடகை வீட்டில்  சுங்கத்துறையினர்  பரிசோதனை நடத்தினர். அப்பொழுது  சந்தீப் நாயரின் தம்பி  மற்றும் தாயார் இருந்துள்ளனர். அப்பொழுது சந்தீப் நாயர் தனது தம்பி ஷோருப்புக்கு தொலைபேசியில்  அழைத்துள்ளார். அப்போது, தான் மறைந்திருக்கும் இடத்தை  சந்தீப் நாயர் தெரிவித்ததுள்ளார். இந்த போன் அழைப்பை வைத்து என்ஐஏ  அதிகாரிகள், இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பெங்களூர் விரைந்து அவர்கள் பிடித்தனர். இந்நிலையில் கைதான 3 பேரும் இன்று கொச்சிக்கு அழைத்து வரப்படுகின்றனர். 

இவர்களை கொச்சி தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் விசாரணைக்கு சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இதற்கிடையே  சந்தீப் நாயர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  தங்க கடத்தலுக்கு பயன்படுத்திய பைகள் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஷரித்தை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஐஏ கமிஷனர் செளகாத் அலி தலைமையிலான அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை  நடத்தினர். இதில் பாசில் ஃபரீத் பற்றியும் கடத்தல் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் துறைமுகம் வழியாகவும் தங்க கடத்தல் நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

378 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

207 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

56 views

பிற செய்திகள்

கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

313 views

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

267 views

ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் - ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு

ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

118 views

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் - கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி

கர்நாடக மாநில உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டுள்ளார்.

3787 views

அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை - முதலமைச்சர் இல்லம் மலர்களால் அலங்கரிப்பு

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெறுவதையொட்டி லக்னோவில் உள்ள உத்தர பிரதேச முதலமைச்சரின் இல்லம் மலர்களால் அங்கரிக்கப்பட்டிருந்தது.

316 views

ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை: "இதுவரை ரூ.30 கோடி நிதி கிடைத்துள்ளது" - பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி

ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 30 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெற்றுள்ளதாக அதன் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.