வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்தின் "துவாரகா" நகரம்

குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்தின் துவாரகா நகரம்
x
குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. துவராகவில் பெய்து வரும் கனமழையால் அந்நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சாலைகளில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால், பல கார்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் கனமழையாலும், வெள்ள நீர் வடியாததாலும் துவராகா நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

"மத்திய அரசு உத்தரவுபடி உணவு தானியமும் தரவில்லை" - பீகார் அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு


கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது. இது தொடர்பாக அண்மையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒரு அறிவுறுத்தல் வழங்கியது. அதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் கணக்கீட்டு, உணவு பொருட்களை வழங்க வேண்டும் என யோசனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பீகாரில் உணவும் வழங்கவில்லை, அதற்கு ஈடான தானியமும் வழங்கவில்லை என முகாபர்பூர் மக்கள் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

4 மாதத்திற்கு பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - கட்டுப்பாடுடன் சுற்றுலா பயணிகள் அனுமதி 


இமாச்சலபிரதேசத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு, சில நிபந்தனைகளுடன் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுநாள்வரை வீட்டில் முடங்கியிருந்த மக்கள், சிம்லாவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு வணிகர்கள், உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழலில், சுற்றுலாவுக்கு அனுமதி அளித்தால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அவர்கள் அஞ்சுகின்றனர். 

தாஜ்மகால் உள்ளிட்ட 800 நினைவிடங்கள் - விரைவில் திறக்க மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை


நாட்டில் உள்ள தாஜ்மகால் உள்ளிட்ட 800 நினைவிடங்கள் இன்றும் திறக்கப்படவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். விரைவில் அவற்றை திறக்க, சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், உரிய முன்னெச்சரிக்கை உடன் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். 

வாகன நிறுத்துமிடத்தில் கொரோனா நோயாளி மரணம் - கொரோனா நோயாளியின் ஒரு மணி நேர உயிர் போராட்டம்


மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில், தனியார் மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று கிடந்த கொரோனா நோயாளி இறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தாருக்கு தகவல் அளிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன நிறுத்துமிடத்தில் கிடந்ததால், தனது தந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டிய மகன், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தகவல் அறிந்து முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். 

பலத்த காற்றுடன் கூடிய கனமழை - மழையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி 


மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக காந்திவலி எஸ்.வி சாலை, போரிவாலி, ஐரோலி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

புயல் நிவாரணம் வழங்க கோரிக்கை - கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது தாக்குதல்


ஆம்பன் புயலுக்கான நிவாரணத்தொகை  வழங்கக்கோரி மேற்குவங்கத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது,  இந்த நிலையில், பார்கனாஸ் பகுதியில்,  புயலுக்கான நிவாரணத்தை உடனே வழங்கக்கோரி,  ஏராளமானோர் பஞ்சாயத்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்