இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 22,771 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 22 ஆயிரத்து 771 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 22,771 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு
x
நாடு முழுவதும் கொரோனாவால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 94 ஆயிரத்து 227 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 லட்சத்து 35 ஆயிரத்து 433 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 18 ஆயிரத்து 655 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 771 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். 442 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 687 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 79 ஆயிரத்து 927 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8 ஆயிரத்து 376 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ள தமிழகத்தில், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 721 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து உள்ளனர். 42 ஆயிரத்து 958 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் 94 ஆயிரத்து 695 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 65 ஆயிரத்து 624 பேர் குணமடைந்து வீடு திரும்பி  உள்ளனர். 26 ஆயிரத்து 148 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்து 923 பேர் பலியாகி உள்ளனர்.

குஜராத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ளது. அங்கு, 34 ஆயிரத்து 600 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 24 ஆயிரத்து 993 பேர் குணமடைந்து உள்ளனர். 7 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்து 904 ஆக உள்ளது.

உத்தர பிரதேசத்தில் இதுவரை 25 ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 597 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 7 ஆயிரத்து 451 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 749 ஆக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்