சர்வதேச எல்லைக்கோடு அருகே சீன துருப்புகள் நடமாட்டம் அதிகரிப்பு : பதிலடி கொடுக்க இந்தியாவும் வீரர்களை குவித்து வருகிறது

இந்தியா, சீனா இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டு அருகே சீன ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து அந்த பகுதியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இந்தியா குவித்து வருகிறது.
சர்வதேச எல்லைக்கோடு அருகே சீன துருப்புகள் நடமாட்டம் அதிகரிப்பு : பதிலடி கொடுக்க இந்தியாவும் வீரர்களை குவித்து வருகிறது
x
இந்தியா, சீனா இடையிலான சர்வதேச எல்லைக்கோடு அருகே சீனா தனது துருப்புகளை அதிகளவில் வைத்து பயிற்சிகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த பகுதியில் ராணுவ வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. தவுலத் பாக் ஒடிலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது  இந்திய ராணுவம் வீரர்களை குவித்து வருகிறது. கால்வான் நல்லா பகுதியில் சீன துருப்புகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பகுதி நமது கண்காணிப்பு பகுதியில் இருந்து 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனா எல்லைக் கோட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் சாலைகளை அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், செயற்கைக் கோள் புகைப்படத்தில் இருந்து தெரியவந்து உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான சர்வதேச எல்லைக் கோடு நெடுகிலும், சீனா அத்துமீறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க ராணுவம் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுகள் நடைபெற்றும் வரும் நிலையில், சீனா தனது நிலைப்பாட்டை விட்டு இறங்கி வராத நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்