ராணுவ தளவாட இறக்குமதி - 2வது இடத்தில் இந்தியா

உலகம் முழுவதும் ராணுவத்திற்கு செலவிடும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா கடந்தாண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.
ராணுவ தளவாட இறக்குமதி - 2வது இடத்தில் இந்தியா
x
நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கால் உலக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடுகளும் ராணுவத்துக்கு செலவிடுவது அதிகரித்து வண்ணம் உள்ளன. 

* கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் உலக நாடுகள் ஆயிரத்து 917 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளன. 

* 1989 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிலை நீடித்து வருகிறது.  

* 732 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்க முதலிடத்திலும், 261 பில்லியன் டாலர்களும், இந்தியா 71.1 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ராணுவத்திற்கு ஒதுக்கி உள்ளன. 

* ஜப்பான் 47.6 பில்லியன் அமெரிக்க டாலரும், தென்கொரியா 43.9 பில்லியன் அமெரிக்க டாலரும் ராணுவத்திற்கு கடந்தாண்டு ஒதுக்கி உள்ளன. 

* 2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா, 5.3, 5.1 மற்றும் 6.8 சதவீதம் அளவுக்கு ராணுவத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன. 

* உலக அளவில் ஆயுத தளவாட இறக்குமதியை பொறுத்த மட்டில் 12 சதவீத இறக்குமதி உடன் சவூதி அரேபியா முதல் இடத்திலும். 9.2 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

* சீன இறக்குமதி 4.3 சதவீதமாகவும், பாகிஸ்தான் 2.6 சதவீதத்துடன் 11 வது இடத்திலும் ஆயுத இறக்குமதியில் உள்ளன. 

* கடந்த 2010 - 2014 மற்றும் 2015 - 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறக்குமதியை குறைத்துள்ளன. இந்தியா 32 சதவீதமும், பாகிஸ்தான் 39 சதவீதமும் குறைத்து உள்ளதற்கு காரணம், உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் என கூறப்படுகிறது.

* இதனிடையே, கடந்தாண்டு நடைபெற்ற பாலகோட் சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற எதிர்தாக்குதல் மூலம், இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ தளவாடங்களுக்கு இறக்குமதியை நம்பியே உள்ளது தெரியவந்துள்ளது. மிராஜ், சுகோய், மிக், இஸ்ரேஸ் குண்டுகள், போபர்ஸ் பீரங்கி என இந்தியா நம்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் எப்.16, ஜே.எப்.17 மற்றும் அவாக்கை பாகிஸ்தான் நம்பி உள்ளது பாலகோட் தாக்குதல் சம்பவம்   மூலம் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்