"சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை" - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்

கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் குறித்து தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்
x
கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் குறித்து தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அரசு ஏழைகளுக்கு செலவிடுவதை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 2008 ஆம் ஆண்டில் நடந்த பொருளாதார மந்த நிலையை விட, தற்போது அதிக விளைவுகள் உருவாகும் என்றும், ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், இந்தியா மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கினை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியாது எனவும், குறைந்த தொற்று பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை எவ்வாறு மறுதொடக்கம் செய்வது என குறித்து அரசு இப்போது திட்டமிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போதைய நிலைமையில் கூட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆரோக்கியமான இளைஞர்களை பணியிடத்திற்கு அருகிலேயே தங்க வைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். போதுமான சமூக இடைவெளியை கடைபிடித்து, உற்பத்தி , விநியோக சங்கிலியை தொடங்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் ராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்