மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
x
மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கையை  பாராட்டி உள்ளார். அதே நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதையும்  சுட்டிக்காட்டி உள்ளார். 

கொரோனா பாதித்தவர்களை அறிந்து,  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இனம் கண்டு, பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.  கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவிலான குழுக்களுடன், விரைவு குழுக்களை அமைக்கவும் கெளபா அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் இனம் கண்டறிவதுடன், சந்தேகப்படும் நபர் மற்றும் உயர் பாதிப்பில் உள்ளவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது  தலையாய கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதனை மாநில அளவில் சுகாதாரத் துறை செயலாளரும், மாவட்ட அளவில் ஆட்சியர்களும் நேரடியாகவும், தொடர்ந்தும் கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனைகளை உருவாக்குவதுடன், நோயாளிகள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், அவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறிதல், பிரத்யேக மருத்துவமனை அமைப்பது உள்ளிட்ட பணிகளை தலைமை செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, அது தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றவும் மத்திய அமைச்சரவை செயலாளர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களை அறிவுறுத்தி உள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்