மத்தியபிரதேசம் : புதிய ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. - தொண்டர்கள் உற்சாகம்

மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அங்கு புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மத்தியபிரதேசம்  : புதிய ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. - தொண்டர்கள் உற்சாகம்
x
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகி பாஜகவில் இணைந்தார்.இதையடுத்து அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கடந்த 16 ந்தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு முதலமைச்சர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால்அன்றைய தினம் வாக்கெடுப்பு  நடத்தாமலேயே  மார்ச் 26-ம் தேதி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேச சட்டப்பேரவை சிறப்பு கூட்ட தொடரை இன்று கூட்டி  மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 6 அமைச்சர்களின் ராஜினாமாவை மட்டும் ஏற்ற சபாநாயகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின பதவி விலகல் கடிதத்தை ஏற்று கொண்டதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் பதவியை கமல்நாத் இன்று திடீரென ராஜினா செய்தார். அவர் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினா கடிதத்தை அளித்தார். அதனை ஆளுநர் ஏற்று கொண்டார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக நீடிக்க கமல்நாத்தை ஆளுநர் கேட்டு கொண்டார். 

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 92 ஆக குறைந்துள்ளது . ஆட்சி அமைக்க 103 எம்.எம்.ஏக்களின் ஆதரவு மட்டும் தற்போது போதும்  என்ற நிலையில் 107 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜக புதிய ஆட்சி அமைக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது போபாலில் பாஜக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்