"ஏழுமலையான் கோயிலில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கே அனுமதி" - தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தகவல்

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில், செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்தார்.
ஏழுமலையான் கோயிலில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கே அனுமதி - தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தகவல்
x
கொரோனா  பரவுவதை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில், செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அணில் குமார் சின்கா தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்பட்டு, காத்திருப்பு அறையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். மேலும், பக்தர்கள் கட்டாயம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்