சொத்து தகராறில் மகனை கொலை செய்த தந்தை - குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரண்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 06:17 PM
புதுச்சேரியில் சொத்து தகராறு காரணமாக மகனை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி  வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் ரஞ்சித் , பிரெஞ்ச் குடியுரிமை பெற்று , மனைவியுடன் அங்கேயே வசித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுமுறைக்காக புதுச்சேரி வந்த ரஞ்சித் , தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வீட்டிற்கு குடித்து விட்டு வந்த ரஞ்சித் , தாயை தலையனையால் அமுக்கி தந்தை குமாரை மிரட்டியுள்ளார். ஆத்திரத்தில் குமார், பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் வீசியுள்ளார். மயக்கமடைந்த ரஞ்சித்தை , குமார் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் காவல்நிலையத்துக்கு சென்று செய்த குற்றத்தை ஓப்புக்கொண்டு குமார் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் , ரஞ்சித் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிற செய்திகள்

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.

4 views

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.

7 views

திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.

8 views

சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சேலத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

11 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

27 views

"கொரோனாவை தடுக்க ரூ.9000 கோடி தேவை" - நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.