"லாக் அப் டெத்" ​நீதி விசாரணை விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

"லாக் அப் டெத்" ​நீதி விசாரணை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
லாக் அப் டெத் ​நீதி விசாரணை விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
போலீஸ் காவல் மற்றும் சிறையில் உள்ளவர்கள் காணாமல் போவது, உயிரிழப்பது தொடர்பான புகார்கள் மீது நீதி விசாரணையை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர்  'சக்மா சுகாஸ்' என்பவர்  மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஆண்டு மட்டும் ஆயிரத்து 942 பேர் உயிரிழந்துள்ளதையும் மேற்கோள்காட்டினார். இதையடுத்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்