சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை அடைப்பு : இன்று 2 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி

சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை அடைக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயில் 13 மணி நேரம் நடை  அடைப்பு : இன்று 2 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி
x
இன்று காலை சூரிய கிரகணம் நிகழுவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று இரவு 10 மணிக்கு பக்தர்களின் அனுமதி நிறுத்தப்பட்டு, கோவில் முழுவதும் சுத்தம் செய்து 11 மணிக்கு மூலவர் சன்னதி முதல் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதோடு, ராஜகோபுரம் அமைந்துள்ள மகா துவார கதவும் மூடப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்ததும் இன்று பகல் 12 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டு, தண்ணீரால் சுத்தம் செய்து  பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சூரிய கிரகணத்தையொட்டி திருப்பாவாடை சேவை,  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்