குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 நிறைவேற்றம் : மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐ.பி.எ​ஸ். அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 நிறைவேற்றம் : மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா
x
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐ.பி.எ​ஸ். அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மத பன்முகத் தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இருப்பதாகவும், நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் பதவி விலகி உள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில மனித உரிமை அமைப்பின் ஐ.ஜி.யாக உள்ள அப்துர் ரஹ்மான் தமது ராஜினாமா கடிதத்தையும் அரசுக்கு அனுப்பியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரான இந்த மசோதாவை, நீதியை விரும்பும் மக்கள் ஜனநாயக ரீதியாக எதிர்த்து போராட முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வரலாற்றை திரித்து தவறான தகவல்களை அளித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது, பதவி விலகியுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அப்துர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்