12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண் : மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி

விஜயவாடாவில், தமிழகத்தை சேர்ந்த பெண், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண் : மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி
x
விஜயவாடாவில், தமிழகத்தை சேர்ந்த பெண், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையை சேர்ந்த லதா, வளர்ப்பு தாய் இறந்ததை தொடர்ந்து, தனது குடும்பத்தினரை கண்டுபிடித்து தரக் கோரி விஜயவாடா போலீஸை அணுகியுள்ளார். மாநில அரசின் ஸ்பந்தனா குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ், மனு ஒன்றையும் வழங்கியுள்ளார். அதில் உள்ள விவரங்களை, சமூக வலைதளம், நாளிதழில் விளம்பரமானதை பார்த்த, குட்லவல்லேறு லட்சுமி நாராயணன், காவல்துறையை அணுகியுள்ளார். அவர்களுக்கு மரபணு சோதனை மேற்கொண்டதில், ஒரே குடும்பத்தினர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு லதா, தனது குடும்பத்தில் மீண்டும் இணைந்தார். பாசப்பிணைப்பில், அந்த குடும்பத்தினர் விட்ட ஆனந்த கண்ணீர், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்