இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பிஆர் 1 : டிசம்பர் 11 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பி.ஆர் 1 விண்கலம் வரும் 11 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பிஆர் 1 : டிசம்பர் 11 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
x
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 50 வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி- சி 48 மூலமாக 'ரிசாட் 2 பி.ஆர் 1'  என்ற விண்கலம், விண்ணில் ஏவப்பட உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில்,  இஸ்ரோ தயாரித்துள்ள இந்த விண்கலத்தில் வர்த்தக ரீதியாக  9  செயற்கை கோள்களும் ஏவப்பட உள்ளதாக கூறியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும்11 ஆம் தேதி மதியம் 3 மணி 25 நிமிடங்களில்  விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 628 கிலோ எடையுடன்,  அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, இஸ்ரோ நாடுகளைச் சேர்ந்த செயற்கை கோள்களுடன்,  576 கிலோ மீட்டரில் நிலை நிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்