13 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் உயர்வு

கடந்த 13 நாட்களில் சபரிமலைஐயப்பன் கோவில் வருமானம், 39 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
13 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் உயர்வு
x
கடந்த 13 நாட்களில், சபரிமலைஐயப்பன் கோவில் வருமானம், 39 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் என, தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக, கடந்த 16 ஆம் தேதி  மாலை நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வரை, 13 நாட்களில், 39 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 261 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். இது, கடந்த ஆண்டை காட்டிலும்  இரு மடங்கு அதிகம் என்ற அவர் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், வருவாயும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்