"தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்.டி.ஐ. வரம்பிற்குள் வரும்" - உச்சநீதிமன்றம்

உயர்நீதி மன்ற - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்.டி.ஐ. வரம்பிற்குள் வரும் - உச்சநீதிமன்றம்
x
உயர்நீதி மன்ற - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என, எஸ்.சி. அகர்வால், சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தகவல் அறியும் சட்டம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் என உத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. பொறுப்பு, சுதந்திரம் ஆகியன ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று கூறிய நீதிபதிகள் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக கூறினர். ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்