முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சென்னையில் காலமானார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார்
x
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.என். சேஷன் சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர்  நேற்றிரவு காலமானார்.  மறைந்த டி.என்.சேஷன் கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ஆம் ஆண்டு  பிறந்தார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற அவர், மத்திய அரசில்  பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் பணியாற்றி உள்ளார். அவரது பதவி காலத்தில் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. சிறந்த பணிக்காக டி.என்சேஷனுக்கு ராமோன் மகசேசே உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. டி.என் சேஷன் மறைவுக்கு முன்னாள் தலைமை தேர்தல்ஆணையர் குரோஷி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்