சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு : பா.ஜ.க.வின் மாணவர்கள் அணி போராட்டம்

கேரளாவில் வாலயார் பகுதியில் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க.வின் மாணவர் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு : பா.ஜ.க.வின் மாணவர்கள் அணி போராட்டம்
x
கேரளாவில் வாலயார் பகுதியில் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க.வின் மாணவர் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு 2 சகோதரிகள், வெவ்வேறு காலக்கட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் 3 பேர் கைது செய்த நிலையில், அவர்கள் மீது போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுவித்தது. இதனையடுத்து அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதாக கூறி, பா.ஜ.க.வின் மாணவர் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தண்ணீரை பிய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்