மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் குழப்பம்...

ஆட்சி அதிகாரத்தில் பாதிக்குப்பாதி என்பதில் சிவசேனா உறுதியாக இருப்பதால், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் குழப்பம்...
x
ஆட்சி அதிகாரத்தில் பாதிக்குப்பாதி என்பதில் சிவசேனா உறுதியாக இருப்பதால், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. 

மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்பே ஆட்சியை 50க்கு 50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் 50 சதவீத அதிகாரம் பற்றி பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை பேசவில்லை என்றும் சிவசேன எம்பி சஞ்சய்ரவுத் கூறியுள்ளார். கூட்டணி ஒப்பந்தத்துக்கு இரு கட்சி தலைவர்களும் உடன்பட வேண்டும் என்றும், மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் உண்மையை பேச வேண்டும் என்றும் அவர்  கூறியுள்ளார். இதனிடையே, பாஜக - சிவசேனா கட்சிகளுக்கு இடையே சமரச கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் '50 -50' பற்றி பேச மாட்டோம் என பாஜகவை சேர்ந்த முதல்வர் பட்னாவிஸ் கூறி விட்டதால், அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டேன் என, சிவசேனா தலைவர் உத்தேவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இப்படி பாஜக - சிவசேனா இடையே முரண்பாடுகள் தொடர்வதால், மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்