டெல்லி : அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு அனுமதி

டெல்லியிலுள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு உரிமை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
டெல்லி : அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு அனுமதி
x
டெல்லியிலுள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு உரிமை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  டெல்லியில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர் என்றும், இந்த குடியிருப்புகளை அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை  முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இதற்கான  மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  குறிப்பிட்டார். டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்