"திரைப்பட வசூல் நாட்டின் பலமான பொருளாதாரத்துக்கு சான்று" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பலமாக உள்ளதாக பா.ஜ.க.வும், மோசமான நிலைக்கு சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.
திரைப்பட வசூல் நாட்டின் பலமான பொருளாதாரத்துக்கு சான்று - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்
x
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பலமாக உள்ளதாக பா.ஜ.க.வும், மோசமான நிலைக்கு சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன. காந்தி ஜெயந்தி அன்று வெளியான 3 படங்களின் ஒருநாள் வசூல் மட்டும் 120 கோடி ரூபாய் என வந்த செய்தியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டி, நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக கூறி இருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, நாட்டின் நிதி பற்றாக்குறை அரசு சொல்வது ​போல 3 புள்ளி 3 சதவீதமாக இல்லை என்றும், 8 சதவீதத்தை தாண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.  2014 ஆம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு ஆண்டுக்கு தோராயமாக 50 ஆயிரம் கோடி அளவுக்கு குறைந்த போதிலும்,  பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்