திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம் : கருட வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம் : கருட வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா
x
கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவமான கருட சேவை நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. கருட சேவையை முன்னிட்டு பக்தர்களின் தேவை மற்றும் பாதுகாப்பிற்காக தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நான்கு மாட வீதிகளில் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமியை திரளான பக்தர்கள் திரிசித்தனர். உற்சவமூர்த்தி மழையில் நனைய கூடாது என்ற ஐதீகம் காரணமாக, பெரிய திருக்குடைக்குள் இருந்து மலையப்பசுவாமி காட்சியளித்தார்.  

இதனிடையே, ஆந்திரா, தெலங்கானா தமிழ்நாடு, ஹிமாச்சல், மணிப்பூர்,  ஒடிசா உள்ளிட்ட 18 மாநிலங்களின் கலைகளை பறைசாற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் மாட வீதிகளில் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் உற்சாகத்துடன் கண்டுகளி்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்