வெங்காய ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அதிரடி

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அதிரடி
x
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வெங்காய விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க தேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்