பிரதமர் பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பா.ஜ.க. முடிவு

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
பிரதமர் பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பா.ஜ.க. முடிவு
x
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், வரும் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்குவதுடன், மாவட்டம் தோறும் 10 மாற்றுத் திறனாளிகளை தேர்ந்தெடுத்து உதவி செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் விளைவை மக்களுக்கு தெரிவித்து, அதனை பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்த உள்ளதாகவும் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்