100 விநாடிகளில் ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக உருமாறியது - பிரதமர் மோடி

ஒரு நிகழ்வு ஒட்டுமொத்த தேசத்தையும் ஒற்றுமையாக இருக்க செய்ததை சந்திரயான் 2 நிகழ்வின், 100 விநாடிகளில் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
100 விநாடிகளில் ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக உருமாறியது - பிரதமர் மோடி
x
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 7ஆம் தேதி அதிகாலையில், சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண ஒட்டுமொத்த இந்தியாவும் டிவி முன்பு அமர்ந்திருந்ததாக தெரிவித்தார். சந்திரயான் 2 திட்டம், துரதிருஷ்டவசமாக வெற்றியாக அமையாவிட்டாலும், அந்த நிகழ்வால் ஒட்டுமொத்த தேசமும் விழித்தெழுந்து ஒற்றுமையாக உருமாறியதை தாம் அந்த 100 விநாடிகளில் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் விவகாரமாக இருந்தாலும் சரி, தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் சரி, 130 கோடி மக்களும் பிரச்னைக்கான புதிய தீர்வை யோசிக்க தொடங்கி விட்டதாகவும் மோடி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்