நிலவை நெருங்குகிறது சந்திரயான்-2

நிலாவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் அனுப்பப்பட்ட சந்திரயான்- இரண்டு விண்கல லேண்டரின் சுற்று வட்டப்பாதை 102 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது.
நிலவை நெருங்குகிறது சந்திரயான்-2
x
நிலாவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் அனுப்பப்பட்ட சந்திரயான்- இரண்டு, விண்கல லேண்டரின் சுற்று வட்டப்பாதை, 102 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. கடந்த மாதம் 20 ம் தேதி, சந்திராயன் 2 , நிலவின் சுற்று வட்டப்பாதையை எட்டியது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட உள்ளது. புதன்கிழமை இரவு நிலவுக்கு மிக நெருக்கமாக- அதாவது நிலவில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவுக்குள் லேண்டர் சென்று விடும். 5 மற்றும் 6 ம் தேதிகளில், லேண்டர் ஆய்வு கலனை, நிலவின் தென் துருவத்தில் எங்கு, எப்படி தரையிறக்குவது என்பது பற்றிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,  திட்டமிட்டபடி, 7 ம் தேதி அதிகாலை லேண்டர் ஆய்வு கலன், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்