அதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு

அமெரிக்காவில் வாங்கப்பட்ட அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.
அதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு
x
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன அப்பாச்சி  போர் ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. அங்கு வடிவமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 200 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் உலகின் பல நாடுகளுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தியாவும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. அவை இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை  தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு கொண்டுவரப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு 
தண்ணீரை பீய்ச்சியடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில்,  அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு பொட்டுவைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வெடி பொருட்களை கொண்டு அப்பாச்சி ஹெலிகாப்டரின் மாடல் AH-64E  என்று காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை பெற்றுள்ள உலகின் 16-வது நாடு இந்தியாவாகும். வானில் பறந்து குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், இந்தியாவுக்கு வர வேண்டிய எஞ்சிய 14 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வந்து விடும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.  எத்தகைய பருவகால நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இணைப்பு மூலம் இந்திய விமானப்படை மேலும் பலம் பெற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்