அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியீடு

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியீடு
x
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் விடுபட்டதாக லட்சக் கணக்கானோர்  மறு சேர்க்கைக்கு விண்ணப்பித்த நிலையில், அடுத்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில், 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேசிய குடிமக்கள் பட்டியல் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் கஜூலா  கூறும்போது, பட்டியல் வெளியானதை அடுத்து, ஏதேனும் குறைகள் இருந்தால் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் முன் முறையீடு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்