இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதா? - பாகிஸ்தானுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதா? - பாகிஸ்தானுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், பாகிஸ்தான் அமைச்சர் ஷிரின் மஷாரி, ஐ.நா.வுக்கு எழுதிய கடிதம் குறித்து கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருவதை ஏற்க முடியாது என்று கூறிய ரவீஷ்குமார், தவறான வதந்திகளை பரப்புவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தானின் வேஷம், உலக நாடுகள் முன் தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாகவும் ரவீஷ்குமார்  குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்