நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாராயணசாமி

விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாராயணசாமி
x
விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். எட்டாயிரத்து 425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்த போது, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட  எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, சபாநாயகர் உத்தரவின் பேரில், அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றினர்.இதனைத் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்த, முதலமைச்சர் நாராயணசாமி, வேளாண்துறை மூலம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த  மானியம் 100 சதவீதம் உயர்வு, விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்