"தாழ்த்தப்பட்டவர்களுக்கு பேப்பர் தட்டு" : உணவகத்தில் தீண்டாமை கொடுமை - வைரலாகும் வீடியோ

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டம் அருகே உணவகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமை குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பேப்பர் தட்டு : உணவகத்தில் தீண்டாமை கொடுமை - வைரலாகும் வீடியோ
x
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டம் அருகே உணவகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமை குறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 
அங்குள்ள டிகாரி கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சாப்பிட சென்றனர். அவர்களை தனியாக உட்கார வைத்து, வழக்கமான தட்டில் பரிமாறாமல், பேப்பர் தட்டில் உணவு வழங்கப்பட்டது. மேலும், சாப்பிடும் போது, தண்ணீர் கேட்ட இளைஞர், கைகழுவும் ஜக்கில் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதுவும் ஊழியர் ஒருவர் தண்ணீரை ஊற்ற அதை கைகளில் பிடித்து குடிக்கிறார் அந்த இளைஞன். இந்த தீண்டாமை கொடுமையை அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். இது போன்ற வீடியோ ஆதாரங்களை பார்த்தாலும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்