ஜம்முவில் செம்மறி ஆடுகள் கிடைக்காமல், இஸ்லாமியர்கள் வருத்தம்...

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்முவில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
ஜம்முவில் செம்மறி ஆடுகள் கிடைக்காமல், இஸ்லாமியர்கள் வருத்தம்...
x
யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்முவில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஜம்முவில் அமைதியான சூழல் நிலவியது. இதனால், 144 ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதேபோல், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, இறைச்சிக்காக ஆடுகள் விற்பனை களைகட்டியது. சந்தைக்கு வந்த இஸ்லாமியர்கள், செம்மறி, வெள்ளாடு உள்ளிட்ட பல்வேறு வகை ஆடுகளை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர். எனினும், வழக்கமான உற்சாகம் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்