ஆசிரியரை நியமிக்காமல் தேர்வு நடத்தியதற்கு வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் சாலை மறியல்

புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியரை நியமிக்காமல் தேர்வு நடத்தியதற்கு வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் சாலை மறியல்
x
புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி  மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ், கணக்கு, மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து விட்டு, மாதாந்திர தேர்வை நடத்தக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரும் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு திரும்பினர்.

Next Story

மேலும் செய்திகள்