சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா நிறைவேற்றம் : ஆதரவாக 143 வாக்குகள், எதிராக 42 வாக்குகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ப.சிதம்பரம், திக்விஜய் சிங் மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரின் கடும் விவாதத்துக்கு பிறகு, சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா நிறைவேறியது.
சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா நிறைவேற்றம் : ஆதரவாக 143 வாக்குகள், எதிராக 42 வாக்குகள்
x
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ப.சிதம்பரம், திக்விஜய் சிங் மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரின் கடும் விவாதத்துக்கு பிறகு, சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 143 வாக்குகளும் மசோதாவுக்கு எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, விரைவில் இது சட்டமாகும். இந்த சட்டத்தின்படி, தனி நபர்களை தீவிரவாதிகளின் பெயர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்