கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு
பதிவு : ஜூலை 16, 2019, 05:20 PM
கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், காலை முதல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பு, சபாநாயகர் தரப்பு, கர்நாடக முதல்வர் குமாரசாமி தரப்பினர் பரபரப்பாக வாதிட்டனர். உணவு இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட்ட வாதத்தில், கர்நாடகா எம் எல் ஏகள் விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாகவும் எனவே, இரண்டு தரப்புக்கு பாதகமில்லாத உத்தரவை தான் பிறப்பிப்போம் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.

அப்போது, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து வாதிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி தரப்பு வழக்கறிஞர் சபாநாயகர் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் தான் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணிக்கு, தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2390 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

10 views

பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு விருது - பிரான்ஸ் கவுன்சிலர் வழங்கி கவுரவிப்பு

புதுச்சேரியில் சாலையோரம் பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கௌரவித்தார்.

105 views

பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்

17 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய 60 வயது பெண்

புதுச்சேரியில் 60 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 views

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

65 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

279 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.