புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆளுநர் கிரண்பேடி மனு
பதிவு : ஜூலை 09, 2019, 05:53 PM
புதுச்சேரி அரசில், துணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் கிரண்பேடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,  ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் அதேசமயம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நாளை வழக்கு விசாரணை நடைபெறவதை ஒட்டி முதல்வர் நாராயணசாமி நேற்று  டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 7 ஆம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

840 views

பிற செய்திகள்

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

11 views

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.

7 views

மும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

9 views

விளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

51 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

34 views

உத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.