மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை : சுகாதாரத்துறை அமைச்சரிடம் திருமாவளவன் மனு

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை : சுகாதாரத்துறை அமைச்சரிடம் திருமாவளவன் மனு
x
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் தனித்தனியாக அளித்துள்ள மனுவில், 'தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்கள் 490 என்றும், அதில் 27 சதவீதம் என்ற அடிப்படையில் 132 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர். இதேபோல், முதுநிலை மருத்துவ படிப்புக்கு, தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு, 879 இடங்கள் அளிக்கப்படுகின்றன என்றும், அதில் 27 சதவீதமாக, 237 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் மத்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால் தமிழ்நாட்டில் மட்டும், 369 பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்பு, ஆண்டுதோறும் பறிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்