சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு : 8 சிறுவர்கள் திருப்பதியில் கைது

திருப்பதி ராமச்சந்திரபுரம் அருகே வீடியோ கேமரா மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு : 8 சிறுவர்கள் திருப்பதியில் கைது
x
திருப்பதி ராமச்சந்திரபுரம் அருகே வீடியோ கேமரா மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம், திருப்பதி அடுத்த ராமச்சந்திராபுரம் காவல் நிலைய போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த 8 சிறுவர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில், சிறுவர்கள் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 வீடியோ கேமராக்கள், 4 ஸ்டில் கேமராக்கள், நான்கு இருசக்கர வாகனம், 5 டிரம்ஸ் மேளம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக, குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. வெங்கடேஸ்வர நாயக் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்