"இந்திய மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்கும்" - ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியா இன்னும் 8 ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்கும் - ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்
x
உலகின் மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. இது அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரித்து 970 கோடியாக 
இருக்கும் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகை ஆயிரத்து 
100 கோடியாக இருக்கும்  என்று  கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய மக்கள் தொகை வரும் 2050 ஆண்டுக்குள் மேலும் 27 கோடி அதிகரிக்கும் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 137 கோடியாக உள்ளது. இது வரும் 2027 ஆண்டுக்குள் சீனாவின் 143 கோடி மக்கள் தொகையை மிஞ்சி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்