விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன்
x
இந்தியா வரும் 2022 ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் என்ற இத்திட்டத்தின் மூலம்  மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்படுள்ளதாகவும் , இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு  கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப  திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருவதாக கூறினார். விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் என்றும் சிவன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்