நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு தொடக்கம்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு தொடக்கம்
x
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக கேரள சுகாதார துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல்,தலைவலி, இருமல், வயிறு வலி, வாந்தி, கண்பார்வை குறைவு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவர்கள் ஊழியர்கள் பணி  அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறியுள்ள நோயாளியிடமிருந்து ஒரு மீட்டர் இடைவெளி தேவையென்றும் என்றும், நிபா தாக்குதலுக்குள்ளான நோயாளியுடன் பழகுவோர் கையுறை மற்றும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில்,  அம்மாநில எல்லைகளில் வசிப்போர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்குள் பரவா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்