தொடுபுழாவை சேர்ந்த 23 வயது மாணவருக்கு நிப்பா வைரஸ் தொற்று...

கேரள மாநிலத்தில் 23 வயதான மாணவர் ஒருவர் நிப்பா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
தொடுபுழாவை சேர்ந்த 23 வயது மாணவருக்கு நிப்பா வைரஸ் தொற்று...
x
கேரள மாநிலத்தில் 23 வயதான மாணவர் ஒருவர் நிப்பா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிப்பா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் என்றும், திருச்சூருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வந்த போது உடல்  நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரது ரத்த மாதிரி புனே ரத்த பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்நிலையில் மாணவர் நிப்பா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து உள்ளதாகவும் அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்