புதுச்சேரி காவல்துறை காலி பணியிடங்கள் - வரும் 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்ட நிலை​யில் ஜூன் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல்துறை காலி பணியிடங்கள் - வரும் 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
x
காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், காவலர் பணிக்கான வயது வரம்பு 22 லிருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 24 வயது வரை உள்ளவர்களும் விண்ணபிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் வரும் 10 -ம் தேதி முதல், ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணபித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்