பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் விரிவாக்கம்

தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம், மாநில போலீசாருக்கும் விரிவுபடுத்தி, பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் விரிவாக்கம்
x
தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம், மாநில போலீசாருக்கும் விரிவுபடுத்தி, பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ஆகவும், மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 250லிருந்து, 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதிகள் மற்றும் நக்சல் தாக்குதல்களில் உயிரிழக்கும் மாநில காவல்துறையினரின் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 500 மாநில காவல்துறையினர் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். பிரதமராக 2 முறை பொறுப்பேற்ற பின், மோடி எடுத்த முதல்  முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்