நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் சண்டை பயிற்சி கலைஞருமான வீரு தேவ்கன் காலமானார்.
நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு காலமானார்
x
அவருக்கு வயது 77. பாலிவுட் திரையுலகில் 150க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சி கலைஞராக பணிபுரிந்து பெருமை பெற்றவர். கடந்த 1999ஆம் ஆண்டு 'இந்துஸ்தான் கீ காசாம்' என்ற திரைப்படத்தையும் அமிதாப் பச்சனை வைத்து வீரு தேவ்கன் இயக்கியுள்ளார். வீரு தேவ்ககின் மகனான அஜய் தேவகன், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். தந்தையை இழந்த அஜய் தேவ்கனுக்கும், அவரது மருமகளான கஜோலுக்கும் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் தங்களது அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்