மியான்மர் : முன்பக்க சக்கரமின்றி அவசரமாக தரையிறங்கிய விமானம்

மியான்மர் நாட்டின் மண்டலே விமான நிலையத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக விமானம் ஒன்று முன்பக்க சக்கரமின்றி அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மியான்மர் : முன்பக்க சக்கரமின்றி அவசரமாக தரையிறங்கிய விமானம்
x
மியான்மர் நாட்டின் மண்டலே விமான நிலையத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக விமானம் ஒன்று முன்பக்க சக்கரமின்றி அவசரமாக தரையிறக்கப்பட்டது. யாங்கூன் நகரில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் தரையிறக்க பயன்படும் கியரில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, முன்பக்க சக்கரமின்றி அது பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதில் பயணித்த 82 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். முன்னதாக முன்பக்க சக்கரமின்றி விமானம் தரையிறங்கும் போது, விமானத்தின் அடிப்பகுதி ஓடுபாதையில் உரசியதில் ஏற்பட்ட தீயினால் உள்புறத்தில் இருக்கைக்கு அடிப்பகுதியில் புகை கிளம்பியதால் பயணிகள் பீதி அடைந்தனர். விமானம் ஒரு வழியாக நின்றவுடன், பயணிகள் அதில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். 

Next Story

மேலும் செய்திகள்